பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி

0

தஞ்சாவூர்:”வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது,” என, வருவாய்துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்களுடன், ஆய்வுக் கூட்டம் நடந்தது.

பின், அமைச்சர் உதயகுமார், கூறியதாவது:அக்., 25க்கு பின், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்கு பருவ மழை காலத்தில், கடலோர மாவட்டங்களில், அதிக கவனம் செலுத்தப்படும். விவசாயிகளுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறும், மக்களை பாதுகாக்கும் வகையிலும், முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions