ரபாடா எந்திரம் அல்ல; வார்னர் விவகாரம் இதை விட மோசமானது: பாரபட்சம் குறித்து டுபிளெசிஸ் சாடல்

0

வார்னருக்கு ஒரு சட்டம் ரபாடாவுக்கு ஒரு சட்டமா? வார்னர் நடத்தை மோசமானது, ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படவில்லை ஏன்? என்று கேட்கிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ்.

ஸ்மித்தை வழியனுப்பி அவரை உரசியதால் ஏற்கெனவே உள்ள தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகள் சேர 2 டெஸ்ட் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க நட்சத்திர பந்து வீச்சாளர் ரபாடா விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வார்னர் விவகாரம் இதைவிடவும் மோசமானது என்று கூறி ஐசிசி தகுதி இழப்புப் புள்ளிகள் முறை மீது தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது:

கிரிக்கெட் உணர்ச்சிகரப் பக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் கேமராவில் உள்ளது, இதைப்பார்த்தாயா, அதைப்பார்த்தாயா… என்று ஆர்வம் கொப்புளிக்கிறது ரசிகர்களிடையே. இது டெஸ்ட் கிரிக்கெட், ஆஸ்திரேலியா அவர்கள் வழியில் டெஸ்ட் போட்டியை ஆடுவது பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. அது ஒருவிதத்தில் ஆட்டத்துக்கு நல்லதுதான்.

கேகிஸோ ரபாடா ஓடி வந்து 15 ஓவர்கள் வீசுகிறார், அவுட் ஆக்க கடுமையாக முயற்சி செய்கிறார் அதில் வெற்றியடையும் போது அவர் உணர்வை வெளிப்படுத்தவே செய்வார், இல்லையெனில் எதற்கு மனிதர்கள் கிரிக்கெட் ஆட வேண்டும், ரபாடாவுக்குப் பதில் பந்து வீச்சு எந்திரத்தையும் பேட்ஸ்மென்க்குப் பதில் ரோபோவையும் ஆடவைக்கலாமே.

ரபாடாவுக்கு எதிரான புகார் லெவல் 2 ஆகும். இதற்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள். அவர் சட்டையை உரசினார். ஆனால் வார்னர் விவகாரம் இன்னும் மோசமானது. ரபாடா ஸ்மித் உடல் தொடர்பு மிக குறைந்தபட்சமாகும். ஆனால் வார்னர் விவகாரம் இப்படியல்ல, இந்த இரண்டையும் ஏன் ஒரே விதமான விதிமீறலாகப் பார்க்க வேண்டும், வார்னர் விவகாரம் இன்னும் அதிகமானது.

மேலும் ஒரு முக்கியத் தொடரின் சூழலையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும், இரண்டு டாப் அணிகள் மோதுகின்றன. சிறந்த வீரர்கள் விளையாடுவது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் இது உடல் ரீதியான மோதல் என்கின்றனர், ஆனால் இது வெறும் சட்டை உரசல்தான். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஆட்ட நடுவர் கூறுவது போல் இதைவிடவும் பெரிய விஷயம் இங்கு நடந்து வருகிறது. பெரிய தொடர் என்பதால் டேவிட் வார்னர் லெவல் 3 நடத்தை மீறல் என்றாலும் தடை செய்யப்படவில்லை. அதுதான் ஏன் என்கிறேன்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions