காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும் – ராகுல்

0
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும் - ராகுல்

 டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84-வது அகில இந்திய மாநாடு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் கட்சி பாடுபடும். மக்களின் கோபத்தை பா.ஜ.க. பயன்படுத்துகையில், காங்கிரஸ் கட்சி அன்பை பயன்படுத்துகிறது. நாட்டை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் சின்னமாக காங்கிரஸ் கட்சியின் சின்னம்  உள்ளது.

நாடு இப்போது மிகவும் சோர்வடைந்துள்ளது. அதில் இருந்து வெளியேறி முன்னேற வழி தேடுகிறது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முன்னேற்றப் பாதையைக் காட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங்,  மற்றும் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்கள், மத்திய, மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நாளையுடன் மாநாடு முடிவடைகிறது.  #tamilnews

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions