உலகின் நம்பர் 1 ஆகியது, மும்பை விமான நிலையம்

0

விமானப் பயணியரின் அனுபவங்கள், விமான நிலைய சேவைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகின் சிறந்த விமான நிலையமாக, மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதை சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில் (ஏசிஐ) அறிவித்துள்ளது. இத்துறையில் இது மிகவும் கவுரவமான விருதாக கருதப்படுகிறது. அதேபோல ஆண்டுக்கு, நான்கு கோடிக்கு அதிகமான பயணியரை கையாளும் முதன்மை விமான நிலையங்களில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முதல் இடம் பெற்றுள்ளது.

விமான நிலையத்துக்கு செல்லும் வசதி, செக்-இன், பாதுகாப்புச் சோதனைகள், ஓய்வறைகள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட 34 காரணிகள் குறித்து, 176 நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணியரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை கடந்த 10 ஆண்டுகளாக, ‘ஜி.வி.கே., எம்.ஐ.ஏ.எல்’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions