தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்

0
தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்

தஞ்சை நகரில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது ரோட்டில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

மோட்டார் சைக்களில் வரும் வாலிபர்கள் திடீரென பெண்களை தாக்கி அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விடுகிறார்கள்.

இதுபற்றி தஞ்சை போலீசாரும் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பு குற்றவாளிகளை தேடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நகைகளை பறிக்க மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி வந்த கொள்ளையர்கள் தற்போது புதிய டெக்னிக்காக காரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பணக்கார வாலிபர்கள் போல் காரில் வந்து தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு நகைகளை பறித்து வருகிறார்கள்.

இதே போல் ஒரு சம்பவம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி ஆனந்தி (54).

இவர் நேற்று சாய்ராம்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் 2 வாலிபர்கள் வந்தனர். தனியாக நடந்து சென்ற ஆனந்தியை நோட்டமிட்ட அவர்கள் திடீரென அவர் அருகே சென்று அவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத ஆனந்தி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். இதனால் அந்த வாலிபர்கள் சுதாரித்துக்கொண்டு தாங்கள் வந்த காரிலேயே மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுபற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஆனந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தஞ்சை மாதாக்கோட்டை ரோடு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜான்சிமியோன். இவரது மனைவி பிலோமினாள் (வயது 40).

இவர் நேற்று மாதா கோட்டை ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், திடீரென பிலோமினாள் அருகில் வந்து அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.

நகையை பறிகொடுத்த பிலோமினாள் இதுபற்றி தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தஞ்சையில் ஒரேநாளில் 2 பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions