ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது எச்சரிக்கை தேவை

0
ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது எச்சரிக்கையாக இருங்கள் - ஆணையம் திடீர் எச்சரிக்கை
எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது, முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் திடீரென எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங் களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் உள்ளதால், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே ஆதார் ரகசியங்கள் வெளியே கசிய விடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. தனிநபர் அந்தரங்கம் இதன்மூலம் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கூகுள் இணையதளத்திலோ, மூன்றாம் தரப்பினரின் இணையதளங்களிலோ தேடினாலே பலரது ஆதார் தகவல்கள் எளிதாக கிடைப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிர்ந்து கொள்வோருக்கு எச்சரிக்கை விடுத்து, ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்காக இணையதளத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களை பகிர்ந்துகொள்கிறபோது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இணையதளத்தில் ஆதார் அடையாள அட்டைகளை வெளியிடுவதற்கு அல்லது பதிவிடுவதற்கு ஆதார் ஆணையம் பொறுப்பு ஆகாது. இது ஆதார் ஆணையம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மற்ற அடையாள ஆவணங்களைப் போல ஆதாரும்கூட ரகசிய ஆவணம் அல்ல.
ஒருவருடைய ஆதார் தகவல்கள் மட்டுமே அவரை ஏமாற்றுவதற்கு போதுமானவை அல்ல. ஒருவரது அடையாளத்தை அங்கீகரிப்பதற்கு ‘பயோமெட்ரிக்’ அங்கீகாரம் தேவைப்படுகிறது.
ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது, ஆதாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது. தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆதார் தரவு தளமானது (டேட்டா பேஸ்) மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions