உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்…

1

இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள், பல்வேறு காரணங்களால், தங்களது தூக்கத்தை தொலைத்து வருவதாகவும், 60 சதவீத இந்தியர்கள், உறக்கத்திற்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிலிப்ஸ் நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகளில் நடத்திய ஆய்வில், 60 சதவீத இந்தியர்கள், உறக்கத்திற்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதுதொடர்பாக, பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சரியான உறக்கமின்மை என்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை. கார்டியோ வாஸ்குலார் நோய்கள், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்டவைகளுக்கு தூக்கமின்மையே அடிப்படை ஆகும்.

19 சதவீத இந்தியர்கள், தாங்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுவதால், அவர்களால் சரிவர உறங்க முடிவதில்லை என்று தெரிவித்துள்ளனர். 32 சதவீத இந்தியர்கள், டெக்னாலஜிக்கு அடிமையாகி உறக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.

24 சதவீத இந்தியர்கள், சிறந்த உறக்கம் மேற்கொள்வதற்காகவே, பிரத்யேக படுக்கை வசதிகளை பயன்படுத்துகின்றனர். 45 சதவீத இளைஞர்கள், சிறந்த உறக்கத்திற்காக, யோகா போன்ற மெடிடேசன் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள முயல்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions