நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா

1

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா

 பழ வகைகளில் ஒவ்வொரு பழத்தின் நிறத்துக்கு ஏற்பவும் அவற்றின் குணநலன்கள் மாறுபடும். ஒரு பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துகள், பைட்டோகெமிக்கல்கள் ஆகியவற்றினால்தான் அதன் நிறம் வேறுபடுகிறது.
அதுவும் கொய்யாப் பழங்களில் சிவப்பு கொய்யா மிகவும் சுவையானது. இது குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது. இப்பழத்தில் கரோட்டினாய்டு, வைட்டமின் ஏ, சி, பி3, பி6, பி9, பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துகள் நிறைந்திருக்கின்றன.

சிவப்பு கொய்யாப் பழத்தில் உள்ள சத்துகள் நம்முடைய செல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி, மார்பகப் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் வராமல் தடுக்கின்றன. அதேபோல, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் சிவப்பு கொய்யா தடுக் கிறது. கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின் பி9 சிவப்பு கொய்யாவில் உள்ளது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை கருவில் உருவாகும்போது ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.

சிவப்பு கொய்யாவில் உள்ள வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைவலி, மன அழுத்தம் போன்றவை வராமல் தடுக்கின்றன.

இரும்புச் சத்து அதிகம் கொண்ட சிவப்பு கொய்யாவைச் சாப்பிடுவதால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், வைரஸ் தொற்றுகளினால் ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளி ஆகிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும்.

சிவப்பு கொய்யாவில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், குறைந்த கிளைசீமிக் இன்டெக்சும் இருக்கின்றன. எனவே சிவப்பு கொய்யாவை சாப்பிடுவதால், நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர்க்கலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் தயங்காமல் சிவப்பு கொய்யாப் பழத்தைச் சாப்பிடலாம்.

Share.

About Author

1 Comment

  1. நாட்டு கொய்யாவின் பலன்களை எழுதமைக்கு நன்றி, நட்டுக்கொய்யா பழக்கன்றுகள்
    எங்கே கிடைக்கும் என்பதை தெரிவித்தால் மிக உதவியாக இருக்கும்.
    தஞ்சை சுற்று வட்டாரத்தில் எங்கே கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கவும்

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions