குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை

0

நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.

பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.

நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட சவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.

இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை ‘கேல்கேனியல் ஸ்பர்’ என குறிப்பிடுவர். சில வேளைகளில் ‘ஸ்கையாட்டிகா’ போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.

இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை முறை:

மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது. பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions