விருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது

0
விருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் பெண் ஒருவர் குற்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தன்னால் அவருடன் இணைந்து வாழ முடியாது என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘அவர் (மனைவி) ஒன்றும் பொருள் கிடையாது. எனவே நீங்கள் அவரை வற்புறுத்த முடியாது. அவர் உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அப்படியிருக்க அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறினர்.

பின்னர் கணவரின் வக்கீலிடம் பேசிய நீதிபதிகள், அவர் (கணவர்) தனது மனைவியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறியதுடன், எப்படி இவ்வாறு நியாயமற்றவராக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

விருப்பம் இல்லாத பெண்ணை அவரது கணவன் விரும்பினாலும், அவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே இந்த குற்ற வழக்கை வாபஸ் பெற்று விட்டு, விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அந்த பெண்ணின் வக்கீல்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions