அமெரிக்காவில் பல ஆயிரம் தலைப்பாகைகளை கட்டி சீக்கிய அமைப்பு கின்னஸ் சாதனை

0
அமெரிக்காவில் பல ஆயிரம் தலைப்பாகைகளை கட்டி சீக்கிய அமைப்பு கின்னஸ் சாதனை

 நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அவ்வப்போது தாக்குதலுக்கு இலக்காகும் சீக்கியர்களின் மதநம்பிக்கையை பிறருக்கும் புரியவைக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியை ‘டர்பன் தினம்’ (சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை தினம்) ஆக அங்குள்ள சீக்கியர்கள் கொண்டாட கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.
சீக்கிய தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சீக்கிய இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வத்துடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions