பிஎச்டி படிப்பு: ஆண்களே அதிக ஆர்வம்

0

இந்தியாவில், பி.எச்டி ஆய்வு படிப்புகளை படிக்க பெண்களை விட ஆண்களே அதிகளவில் பதிவு செய்துள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014- 15 ம் கல்வியாண்டில், நாடு முழுவதுமுள்ள பல்கலைகழகங்களில் பி.எச்டி படிக்க 1,00,792 மாணவர்கள் பதிவு செய்தனர். அதில், பெண்களை விட 21 ஆயிரம் ஆண்கள் கூடுதலாக பதிவு செய்திருந்தனர். 2015- 16 கல்வியாண்டில் 1,09,552 மாணவர்கள் பதிவு செய்ததில், பெண்களை விட 21,688 ஆண்கள் கூடுதலாக பதிவு செய்திருந்தனர். 2016 – 17 ம் கல்வியாண்டில் 1,23,712 மாணவர்களும் பதிவு செய்தனர். அதில், பெண்களை விட 21, 882 ஆண்கள் அதிகம் ஆகும்.

மேலும், 2016 – 17 கல்வியாண்டில், பி.எச்டி படிப்பதற்காக 41,566 மாணவர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் பதிவு செய்தனர். தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் 26,012 மாணவர்களும், மத்திய பல்கலைகழகங்களில் 17, 715 மாணவர்களும், தனியார் பல்கலைகழகங்களில் 16,595 மாணவர்களும் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions