துபாய் பயணிகள் கப்பலில், மிதக்கும் சொகுசு உணவு விடுதி

0

துபாய் பயணிகள் கப்பலில், மிதக்கும் சொகுசு உணவு விடுதி கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

ராணி எலிசபெத்-2 என்ற பயணிகள் கப்பலில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில், சுமார் 657 கோடி) செலவில் வளைகுடா அரபு எமிரேட் சார்பில் இந்த சொகுசு உணவு விடுதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு இந்த கப்பலை கட்டமைக்கும் பணி கடும் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது மினா ரஷீத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட இக்கப்பல் மறுநிர்மானம் செய்யப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் உணவு விடுதி மட்டுமின்றி, திரையரங்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தை ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions