அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் புதியவீடுகள் அர்பணிப்பு..

0

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் அமீரக காயிதே மில்லத் பேரவை அனுசரனையோடு கட்டப்பட்ட 6 இறையருள் இல்லங்களை சமுதாய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் எதிர்வரும் புதன் கிழமை (25-04-2018) அர்பணிக்கிறார்கள்.

கடந்த வருடம் ஜூலை மாதம் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி தீ விபத்தில் சுமார் 60 வீடுகள் தீக்கிரையானது அனைவரும் அறிந்ததே.

தீ விபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து உடன் விபத்து பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் தலைமையில் மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் , இணைச் செயலாளர் ராஜாஜி காஸிம், பொருளாளர் ஜூல்பிகார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிம்லா நஜூப் உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் பார்வையிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் சார்பிலான முதற்கட்ட உதவியாக ரூ.50,000 ஆயிரத்தை ஜமாஅத் நிர்வாகத்திடம் வழங்கினர்.

பிறகு விபத்து பகுதிகளை பார்வையிட வந்த சமுதாய தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு 6 வீடுகள் இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் கட்டி கொடுக்கப்படும்
என அறிவித்தார்கள்.

அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்ட இறையருள் இல்லங்களை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புதன் கிழமை (25-04-2018) காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் 6 வீடுகளை அர்பணிக்க இருக்கிறார்கள். நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் M.L.A., மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரஹ்மான் Ex. M.P., மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில், மின்னணு ஊடகத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், மாவட்ட செயலாளர் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் ஜுல்பிகார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிம்லா நஜீப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சக்கராப்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பணிகள் தொடர துஆ செய்வோமாக…..

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions