உலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்

0
உலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்

டோக்கியோ:
உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் 4-8-1900 அன்று பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரேநபராக கருதப்பட்ட இவருக்கு மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் பிறந்த 160 வாரிசுகள் உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிக்காய் நகரில் வாழ்ந்துவந்த நபி தஜிமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நபி தஜிமா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions