காமன்வெல்த் அமைப்பின் தலைவராகிறார் இளவரசர் சார்லஸ்

0

காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் தனது இடத்துக்கு மகனும், இளவரசருமான சார்லஸ் வர விருப்பம் தெரிவித்தார். அதற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஆதரவு தெரிவித்தனர்.காமன்வெல்த் அமைப்பிற்கு 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சுழற்சியில் தலைவர் பதவிக்கு வர முடியும்.

ராணியின் விருப்பம் குறித்து, லண்டனில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். இதில் காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராக சார்லஸை ஏற்பது, என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் ”காமன்வெல்த் மற்றும் அதன் மக்களை வென்றெடுப்பதில் ராணியின் பங்கை அங்கீகரிக்கிறோம்” என கூறியுள்ளனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions