ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு- சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றி உயிர் துறந்த சோகம்

0
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு- சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றி உயிர் துறந்த சோகம்
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து அம்மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சொகுசு பேருந்து நேற்று கோலார் வழியாக சென்னை நோக்கி சென்றது.

இதனை ஜெயசீலன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர்.

கோலார் பக்க முள்ள நரசாபுரா என்ற இடம் அருகே பஸ் சென்ற போது, திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக டிரைவர் ஜெயசீலன் சாமர்த்தியமாக செயல்பட்டு ஓடும் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தினார்.

பேருந்து நின்றதும், ஜெயசீலன் சீட்டில் இருந்தவாறே பரிதாபமாக உயிரிழந்தார்.

தான் உயிர் துறந்து, 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் ஜெயசீலனின் செயல் மற்றும் தியாகம், பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions