நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? மனதை நெகிழ வைத்த டீ கடைக்காரரின் பதில்

0
நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? மனதை நெகிழ வைத்த டீ கடைக்காரரின் பதில்

 மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற இணைய ஊடகம் சமீபத்தில் மும்பையில் பலரிடம் ‘நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?’என்ற கேள்வியை கேட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூறிய நிலையில், டீக்கடைக்காரர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அப்படி அனைவரும் உருகும் வண்ணம் அவர் என்ன கூறினார் என்றால், “எனது டீக்கடைக்கு அருகே பெரிய ஹோட்டல் ஒன்று உள்ளது. அங்கு ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் மதிய விருந்துக்கு பின்னர், எனது கடைக்கு பலர் டீ குடிக்க வருவார்கள். அன்றைய தினம் எனக்கு அதிகளவில் வருமானம் கிடைக்கும். அப்படி அதிக வருமானம் கிடைத்த ஒரு நாளில் எனது மனைவி மற்றும் குழந்தைகளை முதன் முறையாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அப்போது, குழந்தைகளுக்கு பர்கர் மற்றும் சிறிய பொம்மைகள் வாங்கி கொடுத்தேன். அப்போது, எனது குழந்தைகள் அவர்களின் ஹீரோவை போல என்னை பார்த்தனர். அந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்” என அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி அடங்கிய பேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ள பலர், “உண்மையான நெகிழ்ச்சியான நிகழ்வு” என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பதிவுக்கு மெண்டொனால்ட்ஸ் நிறுவனமும் பதிலளித்துள்ளது. “இதை விட எது எங்களை மகிழ்ச்சியாக்கும். இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions