துபாயில் நடைபெற்ற ” தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு – 2018 ” 

0

தென்னிந்திய வரலாற்றில் தமிழக முஸ்லிம் சமூகம் பலநூறு ஆண்டுகளாக வகித்திருந்த ” சர்வதேச வணிகத்தில் முதன்மை சமூகம் ”  என்ற வரலாற்று மரபை மீட்டெடுக்க வேண்டும்….இந்த
பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொலை நோக்கு இலக்கின் முதல் நிகழ்வாக இந்த மாநாடு துபாயில்
நடைபெற்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்…….

அரபுலகம் இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தொழில் செய்யும் உம்மத்தின் இளம்
தொழில் முனைவோர் ஒருவரை ஒருவர் அகத்தாலும் முகத்தாலும் அறிமுகமாகி கொள்ளும் நிகழ்ச்சியாக  அமைந்திருந்தது.

வருகை தந்திருந்த அனைவரும் தங்களது தொழில் நிறுவனம் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்தனர்.

GCC என்ற 6 அரபுநாடுகள் இந்தியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெருகிவரும் தொழில்
வாய்ப்புகள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த பயிற்சியும்
அளிக்கப்பட்டன.

👉 தமிழக முஸ்லிம்களின் கல்வி அமைப்பில் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை
இஸ்லாமியப்பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்

அதேபோல

👉 சர்வதேச வணிகத்தில் மீண்டும் ஆளுமை செய்திட பெட்டிக்கடை முதல் பன்னாட்டு நிறுவனம் வரை தமிழக முஸ்லிம்களின் வணிக முறைமை இஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.  இது தான்…  தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்  இலக்கு.

இன்ஷா அல்லாஹ்…..

இது போன்ற ஒருங்கிணைப்பு மாநாடு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions