ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை

0
ஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை
ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.
168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் இஷான் கிஷான் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். இந்த சீசனில் அவர் மூன்று முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி உள்ளார். அதில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். கடந்த போட்டியில் அவரும் சூர்யகுமார் யாதவும் டக் அவுட் ஆகினர்.
அவரைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் கோல்டன் டக் அவுட்டானார். இந்த சீசனில் அவர் இரண்டாவது முறையாகவும், ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 9 முறையும் அவர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். இந்த சீசனில் இதுவரை மும்பை அணியைச் சேர்ந்த 12 பேர் டக் அவுட்டாகி, புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அதில் 8 பேர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்தான் மிகவும் குறைந்தபட்சமாக, 2 பேர் டக் அவுட்டாகியுள்ளனர். பஞ்சாப் அணியின் ஆரோன் பிஞ்ச் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*