பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி

0

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻

🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி நாடு உணவகத்தில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது..

🍇 பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்த சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையால் நிகழ்ச்சியில் மெளலவி அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத்துடன் வரவேற்புறை நிகழ்த்தினார்கள்.

🍇அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் SAC ஹமீது அவர்கள் தொகுத்து வழங்க சிறப்பு அழைப்பாளர் பேரா. டாக்டர் சேமுமு முஹம்மதலி MA Ph.D அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

🍇 அபுதாபி தமிழ்சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட், தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் அண்ணன் சிவா, லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசர் அரபாத், ஆவை அன்சாரி அவர்களும் வாழ்த்துறை வழங்கினார்கள்.

🍇அய்மான் சங்க செயலாளர் பூந்தை ஹாஜா நன்றி உரை வழங்கினார்கள்.

🍇நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் :- பூந்தை ஹாஜா , ஆவை.அன்சாரி , பசுபதிகோவில் சாதிக் , நிஜாம் மொகிதீன் , ஃபிர்தவ்ஸ் பாஷா , காயல் ஷேக், காயல் லெப்பை தம்பி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions