நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.

0

 நீட்தேர்வின்போது மசூதிகளில் தங்குவதற்கும் உணவுகளுக்கும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

தமிழகத்தை சேர்ந்த அதிகமான மாணவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். கேரளாவுக்கு நேற்று பெற்றோருடன் புறப்பட்டுச் சென்ற மாணவர்களில் பலருக்கு அங்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. மேலும், ரூ.1,500-க்கும் மேல் வாடகை கேட்டதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும் தவிப்புக்கு உள்ளாயினர்.

இதையறிந்து, எர்ணாகுளத்தில் உள்ள இஸ்லாமியர்கள், மாணவ, மாணவியர் தங்கிக் கொள்ள மசூதிகளில் இடம் கொடுத்து உதவியுள்ளனர். நெருக்கடியான தருணத்தில் கிடைத்த இந்த உதவிக்கு, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொட்டகுளம் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் சிவகிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சலாக்கல் அமல் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகள், நீட் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், தமிழக மாணவர்களே அதிகம். நீட் தேர்வுக்காகத் தங்கள் பிள்ளைகளை கேரளாவுக்கு அழைத்துச்சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தெரியாத ஊர், புரியாத மொழி, உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு, அன்போடு ஆதரவுக் கரம் நீட்டினார்கள் கேரள இஸ்லாமியர்கள்.
மசூதியிலேயே அவர்களைத் தங்கவைத்து உணவு வழங்கி உபசரித்தனர்.  பெற்றோர்கள் காத்திருக்கும் போது,  தொழுகை நடந்ததுஅப்போது,  அவர்களும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

நீட் தேர்வுக்காக, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், #மசூதி_அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வந்தனர். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, காலையிலேயே மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆங்காங்கே சாலைகளிலும், பள்ளி நுழைவு வாயில் முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றவுடன், பெற்றோர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக்கொண்டிருந்தனர்.

உடனே, பெற்றோர்களை மசூதியில் வந்து காத்திருக்கும்படி அழைத்தோம். அவர்களுடன் பேசும் போது தான், பலர் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுசெய்தோம்.

மசூதிக்குள் மனிதநேயத்துடன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சம்பவமே அதற்குச் சாட்சி. இதேபோல, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு இதே உதவியைச் செய்தோம்” என்றனர் மசூதியின் பொறுப்பாளர்கள்.

ஆட்டோவில் இலவச பயணம்

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் தேர்வு மையம் செல்வதற்கான கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கேரள மாநில ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

தலா ரூ5 ஆயிரம் வழங்கிய தமிமுன் அன்சாரி MLA

#நாகை_தொகுதியிலிருந்து நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்கள் யாருக்கேனும் பொருளாதார உதவி தேவைப்பட்டால், அவர்கள் தன்னை தொடர்பு கொண்டால் உதவி செய்வதாக நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்டு உதவி கோரிய 3 மாணவிகள் உட்பட 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகையை தமிமுன் அன்சாரி வழங்கினார். தேர்வு முடிந்து திரும்பி வந்த பிறகு கூடுதல் செலவாகி இருந்தால் அதையும் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions