மேலத்திருப்பந்துருத்தியில் இலவச கத்னா முகாம் நடைபெற்றது.

0

மேலத்திருப்பந்துருத்தியில் பைத்துல் மால் சார்பாக இலவச கத்னா முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, மேலத்திருப்பந்துருத்தி பேருராட்சியில் இன்று 08 மே 2018 செவ்வாய் அன்று மேலத்திருப்பந்துருத்தி பைத்துல் மால் சார்பில் இலவ கத்னா முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்காட்டுப்பள்ளி, வல்லம், பிள்ளையார்பட்டி கண்டியூர், அய்யம்பேட்டை மற்றும் இன்னும் பிற பகுதிகளிலிருந்தும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். வந்திருந்திருந்தவர்களில் அனைவரும் இந்நிகழ்வினில் பயன்பெற்று தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.

இம்முகாமில் 18 ஏழை சிறுவர்களுக்கு கத்னா (சுன்னத்) செய்யபட்டு அவர்களுக்கு தேவையான குணமடைவதற்க்கு மருந்து உபகரணங்கள், புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியினை மேலத்திருப்பந்துருத்தி பைத்துல் மால் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

 

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions