ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்

0
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - குற்றாலம் அருவிகளில் 3-ம் நாளாக குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. இதனால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதேபோல் கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரெயில் வரும் 22-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*