திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீர் அனுமதி

0

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 95 ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அன்பழகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions